Wednesday 1st of May 2024 11:49:34 PM GMT

LANGUAGE - TAMIL
.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் காலையிலும் மழை பெய்யும் வாய்ப்பு!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் காலையிலும் மழை பெய்யும் வாய்ப்பு!


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலையிலும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது அவதான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - அவ்வப்போது மழை பெய்யும்

மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், மட்டக்களப்பு, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE